| 245 |
: |
_ _ |a திருநெல்வாயில் உச்சிநாதர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a திருநெல்வாயில் அரத்துறை |
| 520 |
: |
_ _ |a இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் உச்சிநாதர் என்றும் மத்யனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் கனகாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தலமரமாக நெல்லி மரம் இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் கிருபா தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் புராண காலத்தில் திருநெல்வாயில் என்றழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 3-வது தேவாரத்தலம் ஆகும். அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். திருஞானசம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார். இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில் எனவும் வழங்குகின்றனர். |
| 653 |
: |
_ _ |a கோயில், சிதம்பரம், திருநெல்வாயில், நெல்வாயில் அரத்துறை, கடலூர், சிவபுரி, உச்சிநாதர், மத்யானேசுவரர் கோயில், மத்யானேஸ்வரர், தமிழ்நாட்டு சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். |
| 914 |
: |
_ _ |a 11.372978 |
| 915 |
: |
_ _ |a 79.713635 |
| 918 |
: |
_ _ |a கனகாம்பிகை |
| 922 |
: |
_ _ |a நெல்லி |
| 923 |
: |
_ _ |a கிருபாசமுத்திரம் |
| 925 |
: |
_ _ |a ஐந்து கால பூசை |
| 926 |
: |
_ _ |a வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம் |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a சதுர வடிவக் கருவறையில் உச்சிநாதர் இலிங்க வடிவில் உள்ளார். தனியாக தெற்கு நோக்கிய கருவறையில் நின்ற கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். கருவறைத்திருச்சுற்றில் விநாயகர், முருகன், தென்முகக்கடவுள் முதலிய திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| 930 |
: |
_ _ |a சம்பந்தருக்கு திருமணம் நிச்சயம் ஆன போது இத்தலத்தில் அவரும், அவரது உறவினர்களும் நன்கு பசியோடு ஒரு உச்சி பொழுதில் ஓய்வெடுத்த போது சிவபெருமானே கோயில் பணியாளர் வடிவில் வந்து சம்பந்தர் மற்றும் அவரது உறவினர்கள் அனைவருக்கும் விருந்தளித்து அவர்களின் பசியை ஆற்றினார் இதனால் இத்தல சிவன் உச்சிநாதர், மத்யனேஸ்வரர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். |
| 932 |
: |
_ _ |a உச்சிநாதர் கோயிலில் கிழக்கு பார்த்த ஐந்து நிலை இராஜகோபுரம் நுழைவாயிலாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திருச்சுற்றினைப் பெற்று விளங்குகிறது. இறைவன் கருவறை விமானம் மற்றும் தேவியின் கருவறை விமானம் தனித்தனியாக அமைந்துள்ளன. இறைவன் கருவறை கிழக்கு நோக்கியும், அம்மனின் கருவறை தெற்கு நோக்கியும் காணப்படுகின்றன. சதுரவடிவமான கருவறைகளாக அவை வடிவம் பெற்றுள்ளன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a திருவேட்களம், திருக்கழிப்பாலை |
| 935 |
: |
_ _ |a சிவபுரி சிவன் கோயில் என்றழைக்கப்படும் திருநெல்வாயில் எனும் திருத்தலமானது சிதம்பரத்திற்கு அருகில் 3 கி.மீ தொலைவில் அண்ணாமலைநகர் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் பகல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.15 மணி வரை |
| 937 |
: |
_ _ |a சிவபுரி |
| 938 |
: |
_ _ |a சிதம்பரம் |
| 939 |
: |
_ _ |a மீனம்பாக்கம், புதுச்சேரி |
| 940 |
: |
_ _ |a சிதம்பரம் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000327 |
| barcode |
: |
TVA_TEM_000327 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000327/TVA_TEM_000327_திருநெல்வாயில்_உச்சிநாதர்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000327/TVA_TEM_000327_திருநெல்வாயில்_உச்சிநாதர்-கோயில்-0001.jpg
TVA_TEM_000327/TVA_TEM_000327_திருநெல்வாயில்_உச்சிநாதர்-கோயில்-0002.jpg
TVA_TEM_000327/TVA_TEM_000327_திருநெல்வாயில்_உச்சிநாதர்-கோயில்-0003.jpg
TVA_TEM_000327/TVA_TEM_000327_திருநெல்வாயில்_உச்சிநாதர்-கோயில்-0004.jpg
|